சுதந்திரத்துக்குப் பிறகு , தலைவர்களின் கவனம் அனைத்தும் அரசமைப்புச் சட்டம் மீது திரும்பியது . இந்தியாவுக்கான தனி அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை 1930 களின் மத்தியில் எழுந்தது . அரசமைப்புச் சட்டத்துக்காக இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் ஜவஹர்லால் நேரு 1938 , குரலெழுப்பினார் . 1942 அறிவித்த வேவல் திட்டமும் , இந்தியாவுக்கென தனி அரசமைப்புச் சட்டம் இயற்றப்படும் என உறுதியளித்தன . இந்தியாவுக்கும் , பாகிஸ்தானுக்கும் தனித்தனியாக அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என இந்திய முஸ்லிம் லீக் தரப்பில் கோரிக்கை விடுக்கப்ட்டது . ஆனால் , கிரிப்ஸ் குழுவும் , வேவல் திட்டமும் அதற்கு மறுப்பு தெரிவித்தன . இறுதியாக 1946, அமைக்கப்பட்ட கேபினட் குழு இந்தியாவுக்கான தனி அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க , அரசமைப்பு சாசன சபை ( அல்லது அரசியல் நிர்ணய சபை ) அமைக்கப்படும் என உறுதியளித்து . அதன்படி , 1946, ஜுலை மாதம் அரச மை ப்பு சாசன சபைக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவும் ...